உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / என்.பி.ஆர்.,கல்லுாரி மாணவர்களுக்கு வேலை

என்.பி.ஆர்.,கல்லுாரி மாணவர்களுக்கு வேலை

நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக என்.பி.ஆர்., பொறியியல்,தொழில்நுட்ப கல்லுாரி,கலை,அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கான வளாக நேர்முகத்தேர்வு நடந்தது. வீ கேர் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்டதில் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி முதல்வர் மருதுக்கண்ணன், கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் தபசு கண்ணன் தலைமை வகித்தனர். என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் துணை வேலைவாய்ப்பு அலுவலர் லில்லியன்,சிறப்பு விருந்தினர்களாக வீ கேர் நிறுவனத்தின் சார்பாக மனித வள மேலாளர்கள் சக்தி பாலாஜி, ஸ்வேதா, வர்ஷா பங்கேற்று மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். 32 மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை