உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊராட்சி அலுவலகம் முற்றுகை மூன்று செயலர் இடம் மாற்றம்

ஊராட்சி அலுவலகம் முற்றுகை மூன்று செயலர் இடம் மாற்றம்

ஆத்துார்: அக்கரைப்பட்டியில் அடிப்படை வசதிகள் கோரி ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் பூட்டி முற்றுகையிட்ட நிலையில்,விசாரித்த அதிகாரிகள் மூன்று செயலரை இடமாற்றம் செய்தனர்.ஆத்துார் ஒன்றியம் அக்கரைப்பட்டி ஊராட்சி பகுதியில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் தொய்வு புகார் நீடிக்கிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அலட்சியம் தொடர்ந்தது. இதை தொடர்ந்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் அலுவலகத்தை பூட்டினர். அங்கு வந்த ஊராட்சி தலைவர் லட்சுமியின் கணவர் சக்திவேல் கூடியிருந்த மக்களை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இரு தரப்பினர்இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சூழலில் செம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்னைகள் மீது துரித நடவடிக்கை, ஊராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடு தவிர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் கலைந்தனர்.இது குறித்து தகவலறிந்த அமைச்சர் ஐ.பெரியசாமி துரித தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன்படி பி.டி.ஓ.,க்கள் குமரவேல், அருள்கலாவதி விசாரித்தனர். பணியில் அலட்சியம் காட்டியதாக ஊராட்சி செயலர் வேல்முருகனை அய்யங்கோட்டை ஊராட்சிக்கு இடமாற்றம் செய்தனர். அங்கிருந்த செயலர் பால்ராஜ் செட்டியபட்டிக்கும், ஆத்துார் ஊராட்சி செயலர் கண்ணன் அக்கரைப்பட்டி ஊராட்சி கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை