உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலைப்பகுதியில் சில்லரை மது விற்பனை ஜோர் தேவை போலீஸ் நடவடிக்கை

மலைப்பகுதியில் சில்லரை மது விற்பனை ஜோர் தேவை போலீஸ் நடவடிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் சில்லரை மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கு மேற்பட்டோர் பலியானதை தொடர்ந்து கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் நடந்த சில்லரை மது விற்பனை நிறுத்தப்பட்டது. போலீசாரும் கண்துடைப்பாக சில்லரை மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் தொடந்தனர். இருந்த போதும் தற்போது மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் ஏராளமான இடங்களில் மது விற்பனை கிராமங்கள் தோறும் நடந்து வருகிறது.சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்கின்றனர். மீண்டும் மலைப்பகுதியில் தலைதுாக்கும் சில்லரை மது விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை