உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லஞ்சம் கேட்டால் தகவல் கூற போலீசார் அறிவுறுத்தல்

லஞ்சம் கேட்டால் தகவல் கூற போலீசார் அறிவுறுத்தல்

திண்டுக்கல்: 'அரசு அலுவலர்கள் தங்கள் பணியை செய்ய லஞ்சம் கேட்டாலோ,வாங்கினாலோ,வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தாலோ மக்கள் எந்நேரமும் தகவல் தெரிவிக்கலாம் '' என திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.அரசு அலுவலர்கள் பலர் பொது மக்களிடம் லஞ்சம் கேட்பதால் பலரும் பாதிக்கின்றனர். புகார் கொடுக்க மக்களும் முன்வராததால் பலரும் தப்புகின்றனர். அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் லஞ்சம் வாங்கினாலோ,கேட்டாலோ, அதிகமாக சொத்து சேர்த்தாலோ 0451 - 2461 828, 94981 45647,83000 64769, 83000 14090 ல் தொடர்பு கொள்ளுமாறு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ