| ADDED : ஜூலை 04, 2024 02:35 AM
நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் ஆனி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜை , அலங்காரம், தீபாராதனை நடந்தது. செண்பகவல்லி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு ஹோம பூஜைகள் நடந்தது. நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, வில்வம், சந்தனம், புஷ்பம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் தீபாராதனைகள் நடந்தது. சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.கோபால்பட்டி: கோபால்பட்டி கபாலீஸ்வரர் கோயிலில் நடந்த பிரதோஷ விழா பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் சிறுமலை அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் சிவசக்தி ரூபிணிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. வேம்பார்பட்டி குரு முத்தீஸ்வரர் கோயில், அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், சாணார்பட்டி அருகே காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்கம் கோயில், தவசிமடை சிவன் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழபாடு நடந்தது.கன்னிவாடி : கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் பிரதோஷ பூஜை நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ரெட்டியார்சத்திரம் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில், தர்மத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் பிரதோஷ அபிஷேகம்நடந்தது.