உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருவிழாவில் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பு

திருவிழாவில் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பு

சின்னாளபட்டி: பெருமாள்கோயில்பட்டி சர்ச் விழாவில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.அம்பாத்துறை அருகே பெருமாள் கோயில் பட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் பொது அன்னதானத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆடுகள் பலியிடுவதற்கு இப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதை தொடர்ந்து திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி., தெய்வம், புறநகர் டி.எஸ்.பி., உதயகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் உயர் அதிகாரிகள் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ