உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் விழாவில் ரகளை; மறியல்

கோயில் விழாவில் ரகளை; மறியல்

கீரனுார், ; பழநி அருகே பெரிச்சிபாளையத்தில் கோயில் திருவிழாவில் ரகளையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பழநி அருகே பேரிச்சிபாளையத்தில் உச்சி மாகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு கோயில் உற்ஸவர் சிலையுடன் ஊர்வலம் வந்தனர். அப்போது குடிபோதையில் சிலர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்யக்கோரி கோயில் சப்பரத்துடன் பேரிச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை