உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருட வந்து அலாரம் அடித்ததால் ஓட்டம்

திருட வந்து அலாரம் அடித்ததால் ஓட்டம்

வேடசந்துார், : வேடசந்துார் சேனன்கோட்டையில், வேடசந்தூரை சேர்ந்த தமிழன் ஜவுளி மொத்த வியாபாரம் செய்வதற்காக கட்டடம் கட்டி வருகிறார். ஜூலை 7 ல் இக் கட்டடத்தில் திருட வந்த இரு நபர்கள் சி.சி.டிவி., கேமராவை பார்த்தவுடன் தப்பினர். அதன் சி.சி.டி.வி., காட்சி வைரலானது.இந்நிலையில் நேற்று அதிகாலை 3:19 மணிக்கு கையில் ரம்பத்துடன் கட்டட பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அந்த அறையின் பூட்டை அறுக்க வந்த போது, சி.சி.டிவி., கேமராவுடன் இணைக்கப்பட்ட சைரன் ஒலிக்க துவங்கியது. இதை கேட்ட மர்ம நபர் தப்பியோடும் காட்சி வைரலானது . இதன்படி வேடசந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ