உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காலிப்பணியிடங்களை நிரப்புங்க ஊராட்சி செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

காலிப்பணியிடங்களை நிரப்புங்க ஊராட்சி செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

திண்டுக்கல்: ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டியராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கர்ணன், பொருளாளர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலதண்டாயுதபாணி வரவேற்றார். மாநில ஆலோசகர் சுப்பிரமணி,துணைத்தலைவர் பரமேஸ்வரன், செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, இணைச் செயலாளர் விஜய கர்ண பாண்டியன் பேசினர்.ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணி மாறுதல் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளை அருகில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் கருணை அடிப்படை பணி நியமன இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில இணைச் செயலாளர் துளசிதாசன் நன்றி கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை