உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹாயாக சுற்றும் கால்நடைகளால் விபத்துக்கு வழி

ஹாயாக சுற்றும் கால்நடைகளால் விபத்துக்கு வழி

திண்டுக்கல் ஆர்.எம். காலனி ரோட்டில் எந்நேரமும் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். இதுமட்டுமன்றி அடிக்கடி சண்டையிட்டு ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக மோதிக்கொள்கின்றன. இதில் அப்பாவி மக்கள் சிக்கி தவிக்கின்றனர். ரோடுகளில் ஹாயாக சுற்றும் கால்நடைகள் குறித்து நடவடிக்கை எடுக்காது மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது. தொடரும் இப்பிரச்னையால் அடிக்கடி வாகன விபத்துக்களும் நடக்கின்றன. மாடுகள் ரோடுகளில் சுற்றி திரிவதை தடுக்க இனியாவது மாநகராட்சி நிர்வாகம் அபராதம் ,பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்............நடவடிக்கை எடுக்கப்படும் நகரில் சுற்றும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.ரவிச்சந்திரன்,மாநகராட்சி கமிஷனர்,திண்டுக்கல்.................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி