உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் தொடர்மழை பூங்காவில் அழுகும் பூக்கள்

கொடையில் தொடர்மழை பூங்காவில் அழுகும் பூக்கள்

கொடைக்கானல் : கொடைக்கானலில் தொடர் மழை பெய்வதால் பிரையன்ட் பூங்காவில் உள்ள பூக்கள் அழுகி வருகின்றன. கொடைக்கானலில் மே மாதம் 61 வது மலர் கண்காட்சி, கோடை விழா 10 நாட்கள் நடந்தது. இவ்விழா தொடங்கியது முதல் இடைவிடாது மழை பெய்து மலர் கண்காட்சிக்கு இடையூறு ஏற்பட்டது. இருந்த போதும் கட்டண உயர்வால் தோட்டக்கலைத்துறை செலவினம் போக எதிர்பார்த்த வரவை எட்டியது. இரண்டாம் கட்ட ஆப் சீசனில் பூத்துக் குலுங்கும் என எதிர்பார்க்கப்பட்ட டேலியா, அரிஸ்டோ மேரியா, ரோஜா, டெல்பீனியம், மேரிகோல்டு, சால்வியா, ஆஸ்டர், பேன்ஸி பூக்கள் தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் அழுகி உள்ளன. எனினும் பூங்கா நிர்வாகம் மலர் நாற்றுகளை நடவு செய்து ஈடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பூங்காவிற்கு வருகை தரும் பயணிகள் பூக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை