| ADDED : ஜூன் 23, 2024 04:30 AM
கோபால்பட்டி: -கோபால்பட்டி அருகே சில்வார்பட்டி தொட்டிச்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.கோபால்பட்டி சில்வார்பட்டி தொட்டிச்சியம்மன், மகா லிங்கேஸ்வரர், மகா கருப்பணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் யொட்டி விநாயகர் வழிபாடு மகாலட்சுமி ஹோமம், சுதர்சன் ஹோமம், நவகிரக ஹோமம், வழிபாடு, முதல், இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம், மூல மந்திர ஹோமம் நடந்தது.காசி, ராமேஸ்வரம், அழகர்மலை, வைகை, காவேரி உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.*நிலக்கோட்டை நுாத்துலாபுரம் ஊராட்சி, சீத்தாபுரத்தில் விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு முளைப்பாரியுடன் யாக பூஜைகள் நடந்தன. மூன்று நாட்களாக பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.