உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதலிடம்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆவேசம்

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதலிடம்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆவேசம்

திண்டுக்கல் : ''சட்ட ஒழுங்கு சீர்கேடு, மக்களை கொடுமை படுத்துவது ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக'' அ.தி.மு. க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.மின்சார கட்டணத்தை தொடர்ந்து 3 வது முறையாக உயர்த்தி ரேஷன்கடைகளில் பருப்பு பாமாயில் பொருட்களை நிறுத்த முயற்சிக்கும் தி.மு.க., அரசை கண்டித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மணிக்கூண்டு அருகில் நடந்த ஆர்பாட்டத்திற்கு தலைமை வகித்த அவர் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. லோக்சபா, விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க., வை வெற்றி பெற வைத்த மக்களுக்கு தண்டனையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். அ.தி.மு.க., ஆட்சியின்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்துகிறோம் என சொன்னதற்கே தி.மு.க.,வினர் ஷாக் அடிக்குது என போராட்டம் செய்தார்கள்.தேர்தல் நேரத்தில் மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கீடு என பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள். ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் கொடுப்பதில்லை.மின்சாரக் கட்டண உயர்வு, கள்ளச்சாராய சாவு, மணல் கொள்ளை, கொலை, கொள்ளை, கடன் வாங்குவது தொடங்கி ஊழல் வரை தி.மு.க., ஆட்சியில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்றார்.அமைப்புச் செயலாளர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பிரேம்குமார், நடராஜன். மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் ராஜ் மோகன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், இளைஞர் அணி செயலாளர் ராஜன், முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்ஷா, தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், கலை பிரிவு செயலாளர் ரவிக்குமார், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் பிரபு ராம், ஒன்றிய நகர செயலாளர்கள் நடராஜன், பாலசுப்பிரமணி, ஜான் போஸ்கோ, தண்டாயுதம், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பழனிச்சாமி ,மனோகரன் கலந்து கொண்டனர்.

நத்தம் விஸ்வநாதன்

நத்தம்: - நத்தம் பஸ்ஸ்டாண்ட் ரவுண்டானா முன்பாக கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: தமிழகத்தில் சிறு தொழில்கள் நசுங்கி விட்டது. பொருளாதார நிலையும் பாதிப்படைந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகளை நிறுத்த தமிழக அரசு முயற்சி செய்கிறது. இது கண்டித்தக்கது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம், கஞ்சா என போதைப் பொருள்களின் கூடாரமாக உள்ளது. இப்படிப்பட்ட மோசமான ஆட்சியை தமிழகம் இதுவரை கண்டதில்லை. தி.மு.க., அமைச்சர்கள் மக்கள் பிரச்னையை கவனிக்காமல் கல்லா கட்டும் வேலையை பார்த்து வருகின்றனர் என்றார்.நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி, மாநில ஜெ.பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ,க்கள்., வேணுகோபால், குப்புசாமி, நகரச் செயலாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தனர். நகர அவைத் தலைவர் ஷேக் ஒலி வரவேற்றார். ஜெ.பேரவை இணை செயலாளர்கள் சுப்ரமணி,ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சின்னு, சுப்பிரமணி, முருகன், தொழிற்சங்க செயலாளர் முத்தையா , இலக்கிய அணி செயலாளர் தங்கதுரை,வர்த்தக அணி பொருளாளர் ஹரிஹரன், மணிகண்டன், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் எம். ராஜேந்திரன், இணை செயலாளர் விஜயன், ஒன்றிய பொருளாளர் மகாராஜன்,இளைஞரணி ரமேஷ், ஆத்துார் ஒன்றிய பேரவை செயலாளர் சந்தானகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை