உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளி குழந்தைகளுக்கு பரிசு தந்த ஆசிரியர்கள்

பள்ளி குழந்தைகளுக்கு பரிசு தந்த ஆசிரியர்கள்

வடமதுரை:வடமதுரை கலைமகள் துவக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேரும் குழந்தைகளை வரவேற்கும் வகையில் ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் தலா ஒரு பள்ளி சீருடை வழங்குவதை சில ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளனர். இதன்படி இவ்வாண்டில் கல்வி பயில சேர்ந்த 65 முதலாம் வகுப்பு குழந்தைகளுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஆர்.கே.பெருமாள் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாலரவிச்சந்திரன், பி.டி.ஏ., தலைவர் குப்பாச்சி முன்னிலை வகித்தார். ஆசிரியை ஹேமலதா வரவேற்றார். செயல் இயக்குனர்கள் சுப்பம்மாள், அருள்மணி, ஹரிஸ்செந்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை