உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காரை அடித்து நொறுக்கிய தி.மு.க., கவுன்சிலர் கணவர்

காரை அடித்து நொறுக்கிய தி.மு.க., கவுன்சிலர் கணவர்

நத்தம்: ரோட்டில் நின்ற தி.மு.க., பிரமுகர் காரை அடித்து நொறுக்கிய தி.மு.க., கவுன்சிலர் கணவரை போலீசார் தேடுகின்றனர்.நத்தம்- கோவில்பட்டியை சேர்ந்தவர் பிரவீன் 41.தி.மு.க., நிர்வாகியான இவர் காக்காபட்டி செல்லும் பகுதியில் கார் செட் வைத்துள்ளார். இவரது காரை செட்டில் நிறுத்துவதற்காக பாலமேடு-பள்ளபட்டியை சேர்ந்த டிரைவர் ரிஸ்வந் 25, எடுத்து சென்றார். ரோட்டின் அருகில் காரை நிறுத்திவிட்டு செட்டை திறக்க சென்றார். அந்த வழியாக வந்த நத்தம் 15 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் வைதேகி கணவர் குமராண்டி, ரோட்டில் ஏன் வண்டியை நிறுத்துகிறாய் என கூறி டிரைவர் ரிஸ்வந்தை தாக்கினார். ஆத்திரம் தீராமல் காரின் பின்பக்க கண்ணாடியை கையால் அடித்து உடைத்துள்ளார். காரின் உரிமையாளர் பிரவீன் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் தலைமறைவான குமராண்டியை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி