உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பத்திரப்பதிவு ஆபிசில் 13 ஆண்டாக இல்லை அதிகாரி

பத்திரப்பதிவு ஆபிசில் 13 ஆண்டாக இல்லை அதிகாரி

வடமதுரை ; வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் 13 ஆண்டுகளாக நிரந்தர சார்பதிவாளர் இல்லாததால் பல்வேறு சிரமங்களுடன் மக்கள் பரிதவிக்கின்றனர்.வடமதுரை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு நிரந்தர சார் பதிவாளர் இல்லாமல் வெவ்வேறு ஊர்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களே மாற்று பணியாக வருகின்றனர். இதனால் வில்லங்க சான்று ஆண்டு கணக்கில் தேங்கி உள்ளது. ஆவணங்களும் பதிவு செய்ய முடியவில்லை. நில மதிப்பு நிர்ணயம் செய்வதற்கு தாமதம், அலுவலகத்திற்கு பணியாளர் தாமதமாக வருவது என பல பிரச்னைகள் இங்குள்ளன. சிக்கல் மிகுந்த விஷயங்களில் சரியான முடிவு எடுக்கப்படாமல் கிடப்பில் விடப்படுவதால் மக்கள் மாதக்கணக்கில் அலையும் நிலை உள்ளது. இங்கு நிரந்தர சார்பதிவாளர் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ