உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ட்ரீட்மெண்ட் ஆரம்பித்த போலீசார்

ட்ரீட்மெண்ட் ஆரம்பித்த போலீசார்

திண்டுக்கல்:திண்டுக்கல் ராமையன் பட்டியைச் சேர்ந்தவர் ஜீசஸ் ஆண்டனி. இவரை அதே பகுதியைச் சேர்ந்த செந்தூரியான்,என்பவர் முன்விரோதம் காரணமாக ஜூலை 24ல் அரிவாளால் வெட்டினார். தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து செந்தூரியானை தேடி வந்தனர். இதையடுத்து நேற்று ராமையன்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த செந்தூரியானை, பிடிக்க எஸ்.ஐ., பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓட முயன்றார். இதில் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்து செந்தூரியனுக்கு வலது கையில் முடிவு ஏற்பட்டது. போலீசார் உடனே அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். செந்தூரியனுக்கு கையில் கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ