உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரத்தில் இல்லை மழைமானி

ஒட்டன்சத்திரத்தில் இல்லை மழைமானி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் மழைமானி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஒட்டன்சத்திரம் தாலுகா விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள சத்திரப்பட்டியில் மழை மாணி உள்ளது.இதேபோல் ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியான பரப்பலாறு அணை பகுதியிலும் மழை மானி உள்ளது. முன்பு ஒட்டன்சத்திரம் தாலுகாவில் மழை மானி இருந்த நிலையில் தற்போது பயன்பாட்டில் இல்லை. இதனால் சத்திரப்பட்டி பகுதியில் பதிவாகும் மழையே கணக்கிடப்பட்டு வருகிறது. பல நேரங்களில் ஒட்டன்சத்திரத்தில் மழை பெய்யாமல் இருந்தபோதிலும் சத்திரப்பட்டி பகுதியில் அதிகமாக பெய்கிறது. அதே நேரம் ஒட்டன்சத்திரத்தில் நல்ல மழை பெய்யும் போது சத்திரப்பட்டி பகுதியில் குறைவான மழை பெய்வதால் ஒட்டன்சத்திரம் பகுதியில் மழை இல்லை என பதிவு செய்யப்படுகிறது. இந்த முரண்பாட்டை போக்க ஒட்டன்சத்திரம் பகுதியில் மழை மானி அமைக்கப்படுவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை