| ADDED : ஜூலை 26, 2024 12:23 AM
சரக்கு வாகனங்களால் நெரிசல்எரியோடு பஸ் ஸ்டாப்பில் சரக்கு வாகனங்களை நிறுத்தி சரக்கு இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் தினம் தோறும் ஏற்படுகிறது .பள்ளி நேரங்களில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர் .சரக்கு வாகனங்களை தள்ளிப் நிறுத்த வேண்டும். முகமதுல்லா எரியோடு...........-----சாக்கடையில் பிளாஸ்டிக் குப்பைதிண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் சாக்கடையில் பிளாஸ்டிக் கலந்த குப்பை தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது . பல நாட்களாக அப்படியே தேங்கி உள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது .கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். குமார், திண்டுக்கல்.............------பராமரிப்பில்லா பூங்காபழநி நகராட்சி 28 வது வார்டு பழைய போஸ்ட் ஆபிஸ் சந்தில் பல ஆண்டுகளாக பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்து வருகின்றன. இதனை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.முருகதாஸ், பழநி.......------கால்நடைகளால் இடையூறுபழநி கிரிவிதி வின்ச் ஸ்டேஷன் அருகே கால்நடைகள் எந்நேரமும் திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது .பக்தர்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது .கால்நடைகளை கிரிவீதியில் விடுவதை தடுக்க வேண்டும் செல்வராஜ் , பழநி..........-------சேதமான ரோடுஒட்டன்சத்திரம் நகராட்சி தாராபுரம் ரோட்டில் இருந்து மார்க்கெட் செல்லும் பைபாஸ் ரோடு பள்ளம் மேடாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது. ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - வீரக்குமார் ஒட்டன்சத்திரம்.............-------கழிவு நீரால் தொற்றுநத்தம் அருகே பரளிபுதுாரில் அரசு நடுநிலைப்பள்ளி எதிரே உள்ள பாலத்தில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பள்ளி சிறுவர்கள் நடமாடும் பகுதியில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.கழிவு நீரை அகற்ற வேண்டும். தங்கராஜ், பரளிபுதுார்.....-------காய்வாயில் குப்பைஅய்யலுார் கெங்கையூர் ரோட்டோரம் இருக்கும் தும்மினிக்குளம் நீர் வரத்து காய்வாயில் குப்பையை கொட்டி சிலர் தீவைக்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ரோட்டேரங்களில் குப்பையை எரிப்பதை தடுக்க வேண்டும். -வேல்முருகன், அய்யலுார்.