உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தடகளத்தில் முதலிடம் பிடித்த மாணவி

தடகளத்தில் முதலிடம் பிடித்த மாணவி

வேடசந்துார் : திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி இணைந்து மாவட்ட அளவிலான சிறுவர்களுக்கான தடகளப்போட்டி நடத்தியது. 12 வயதுக்கு உட்பட்டோர்க்கான போட்டியில் வேடசந்துார் கே.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி கவிதா 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றார். இதோடு நீளம் தாண்டுதலில் முதலிடம் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவி கவிதாவை கே.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன், உதவி தலைமை ஆசிரியர் வீரமணி, ஆசிரியர் முத்து மீனா, உடற்கல்வி ஆசிரியர்கள் முனியப்பன் செந்தில் வடிவு பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை