உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் : திருச்சியிலிருந்து வெள்ளக்கோயிலுக்கு காற்றாலைக்கு பொருத்தக்கூடிய ராட்சத இரும்பு உருளையை லாரியில் ஏற்றி கொண்டு வந்தனர்.இந்த லாரி நேற்று முன்தினம் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே வந்தது. அப்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ராட்சத இரும்பு உருளைகள் கீழே சரிந்தது. இதை நேற்று உருளைக்கு சம்பந்தபட்டவர்கள் கிரேனை கொண்டு வந்து மீண்டும் லாரியில் ஏற்றி செல்ல முயன்றனர். இதனால் அஞ்சலி ரவுண்டானா அருகே 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தாடிக்கொம்பு போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை