| ADDED : ஜூன் 21, 2024 05:25 AM
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. போலீசார் இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர், வெளி மாநில அதிக பக்தர்கள் வருகின்றனர். பழநி கோயில் கிரிவிதி, அடிவாரம் பகுதிகளில் தனியார் வாகனங்களை நீதிமன்ற உத்தரவு காரணமாக அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை ரோட்டோரங்களில் நிறுத்தி செல்கின்றனர். கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா வாகன பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தாமல் அருள் ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, பூங்காரோடு சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் பூங்காரோடு, அய்யம்புள்ளி ரோடு, அருள்ஜோதி வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.போக்குவரத்து இடையூறுகளை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு கண்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.