உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இறந்த கோயில் காளைக்கு அஞ்சலி

இறந்த கோயில் காளைக்கு அஞ்சலி

நத்தம்: நத்தம் காந்தி நகரில் இறந்த கோயில் காளைக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.-நத்தம் காந்தி நகர் மலையாளத்து கருப்பு மந்தையம்மன் கோயில் காளை கிணற்றில் விழுந்து இறந்ததை தொடர்ந்து காளை மந்தையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாலைகள், சந்தனம், ஜவ்வாது, வேட்டி, துண்டுகள் அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். சுற்று கிராம மக்களும் மரியாதை செலுத்தினர். இந்த காளையானது அலங்காநல்லுார், பாலமேடு, அவனியாபுரம், கொசவபட்டி, தவசிமடை உள்ளிட்ட இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசு, சில்வர், பித்தளை, சைக்கிள் போன்ற பரிசு பொருட்களை வென்றது. இதை தொடர்ந்து காளை ஊர்வலமாகஎடுத்துச் செல்லப்பட்டுகோயில் அருகிலே அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !