உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 3000 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு

3000 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் 24 வார்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.மீதமுள்ள 24 வார்டுகளில் திட்டம் செயல்படாமல் மக்கள் பாதித்தனர். இதைத்தடுக்கும் வகையில் புதிதாக 3000 பாதாள சாக்கடை இணைப்புகள் அமைக்க கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி பொறியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் 9 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது.நேற்று முதல் ஒவ்வொரு வீடு வீடாக பாதாள சாக்கடை இணைப்பு குறித்து ஆய்வு நடந்தது. கமிஷனர் ரவிச்சந்திரனும் இப்பணிகளை ஆய்வு செய்தார். பாதாள சாக்கடை இணைப்புகளை விரைந்து வழங்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ