உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நல்லபிச்சம்பட்டியில் உத்திரியமாதா சப்பர பவனி

நல்லபிச்சம்பட்டியில் உத்திரியமாதா சப்பர பவனி

செந்துறை, நத்தம் அருகே செந்துறை-நல்லபிச்சம்பட்டியில் உத்திரியமாதா சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஆறுசப்பரபவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நல்லபிச்சம்பட்டி உத்திரியமாதா சர்ச் திருவிழா ஜூலை 14ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினமும் நவநாள் திருப்பலி ,15-ல் பொங்கல், அன்று இரவு தேர்பவனி நடந்தது.16 மாலை பொதுபொங்கல், திருச்சி தென்கிழக்கு மாகான தலைவர் பேட்ரிக் ஜெயராஜ், பாதிரியார்கள் இணைந்து திருவிழா ஆடம்பர பாடல் கூட்டுத் திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வானவேடிக்கை முழங்க உத்திரிய மாதா அன்னை தேர் பவனி, புனிதர்களின் 5 சப்பர தேர் பவனிகளும் நடைபெற்றது.இதில் ஏராளமனோர் கலந்து கொண்டு உத்திரிய மாதா அன்னை மற்றும் புனிதர்களை வழிபாடு செய்தனர். நேற்று சப்பரபவனி, திருப்பலி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை