உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உத்திரிய மாதா சர்ச் தேர்பவனி

உத்திரிய மாதா சர்ச் தேர்பவனி

சாணார்பட்டி: சாணார்பட்டி கொசவபட்டி புனித உத்திரிய மாதா சர்ச்சில் 40தாம் நாள் திருவிழா மின் அலங்கார தேர்பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.மே5ல் இரவு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இன்னிசை நிகழ்ச்சியும்,மறுநாள் இரவு மின்தேர் பவனியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து மின் அலங்கார ரதத்தில் ஏசுநாதர் எழுந்தருளிய காட்சி நடந்தது. நேற்று வாண வேடிக்கை முழங்க, தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் கும்மியாட்டத்துடன் மின் ரத தேர்பவனி நகர்வலம் வந்தது. வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். மே 19 இரவு கொடி இறக்கத்தை தொடர்ந்து வேத சாட்சியான புனித தேவ சகாயம் பிள்ளை எனும் சரித்திர நாடகம் நடக்கிறது. மணியம் அருளப்பன், நாட்டாமை ஜான் பீட்டர் ஆரோக்கியராஜ், மேனேஜர் அருளானந்து, பொருளாளர் சூசைராஜ் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ