உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம்

வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம்

ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் அண்ணாமலைபுதுார் ஸ்ரீ காளியம்மன் கோயில் திடலில் ஸ்ரீபவன் கலைக்குழுவின் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம் நடந்தது. ஒரு மாதமாக பயிற்சி பெற்ற 5 முதல் 50 வயதான 100 பெண்கள், ஆண்கள் பங்கேற்றனர். முருகப்பெருமான், வள்ளி ஆகியோரின் வரலாற்றை நினைவூட்டும் விதமாக கொங்கு நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த கும்மி ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது. உள்ளூர், வெளியூர் பகுதியிலிருந்து ஏராளமானோர் கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !