உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வெப்பத்தை தணிக்க 216 இடங்களில் தண்ணீர் பந்தல்

வெப்பத்தை தணிக்க 216 இடங்களில் தண்ணீர் பந்தல்

திண்டுக்கல்: கோடை வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள மாவட்டத்தில் 216 இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.அடுத்து வரும் 5 நாட்களுக்கு அதிக வெப்பம், வெப்ப அலையும் ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது .இதை யொட்டி மாவட்டத்தில் உள்ளஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு, சமூகநல மையங்கள், மகப்பேறு, தொற்றுநோய் மருத்துவமனைகளில் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. மனித உடல் வெப்ப நிலை 37 டிகிரி சென்டி கிரேடு . இதை மையமாக்கி பொதுமக்கள் தங்களை பாதுகாக்க பகல் 12:00 முதல் மதியம் 3 :00 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரித்து டீ, காபி, கார்போனைட் குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மாற்றாக கஞ்சி, ஓ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர், பழச்சாறுகள், காய்கறிகள் சாப்பிட வேண்டும்.வெப்ப தாக்கத்திலான நோய்களுக்கு கண்ட மருந்துகளை உட்கொள்ளாமல் அருகில் உள்ள மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். இதற்காக மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, 12 அரசு மருத்துவமனைகள், 11 தொழிலாளர் மருத்துவமனைகள், 73 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 346 துணை சுகாதார நிலையங்கள் சிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ளன.மருந்து கிடங்கில் 2 லட்சம் ஓ.ஆர்.எஸ்., கரைசல் பாக்கெட்டுகள், 1 லட்சத்து 5ஆயிரம் ஐ.வி., மருந்துகள் இருப்பில் உள்ளது. மேலும் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. உதவிக்கு ஆம்புலன்ஸ் 108, சுகாதார உதவி -104 ஆகியவைகளுடன் 0451 -243 2817 என்ற எண்களில் அழைத்து பொதுமக்கள் பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி