உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏன் இந்த பாகுபாடு; கொள்முதல் நிலையங்களில் குறிப்பிட்ட ரகங்களே ஏற்பு ; வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பதால் தவிப்பு

ஏன் இந்த பாகுபாடு; கொள்முதல் நிலையங்களில் குறிப்பிட்ட ரகங்களே ஏற்பு ; வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பதால் தவிப்பு

திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. வெளியூர் வியாபாரிகள் மூலம் விவசாயிகள் நெல்லை விற்று வருகின்றனர். அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சில நேரங்களில் தற்காலிகமாக அமைக்க விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்கின்றனர்.இங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டுமே நெல்லை கொள்முதல் செய்ய முடிகிறது. இதோடு தமிழகத்தில் விரும்பி வாங்கும் நெல்லை மட்டும்தான் விற்க இயலும். பழநி பகுதியில் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் விரும்பி வாங்கும் ஜோதி மட்டை, உமா மட்டை நெல் ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றை தமிழக அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்க இயலாது. இதனால் விவசாயிகள் வெளியூர் வியாபாரிகளிடம் கிடைத்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இத்தகைய நெல் ரகங்களையும் அரசு கொள்முதல் நிலையங்களில் பெற்று பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை