உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாண்டிக்குடி ரோட்டில் காட்டு யானை

தாண்டிக்குடி ரோட்டில் காட்டு யானை

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பண்ணைக்காடு ரோட்டில் காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் அச்சமடைந்தனர்.சில தினங்களாக தடியன்குடிசைப் பகுதியில் முகாமிட்டிருந்த இரண்டு காட்டு யானைகள் பண்ணைக்காடு எதிரொலிபாறை ஒட்டிய ரோட்டோரம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் நடமாடின. அவ்வழியே சென்ற வாகன ஒட்டிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து பெரும்பள்ளம் வனத்துறையினர் யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருவதாக ரேஞ்சர் குமரேசன் தெரிவித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை