உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின் ஊழியர் என கூறி வசூல் செய்த பெண்கள்

மின் ஊழியர் என கூறி வசூல் செய்த பெண்கள்

சாணார்பட்டி: சாணார்பட்டி பகுதியில் மின் இணைப்பு எண்ணை புதிதாக எழுதி ஒட்ட வந்துள்ளதாக கூறி மின் ஊழியர் போர்வையில் பெண்கள் இருவர் வீடுகளில் தலா ரூ. 50 வசூல் செய்துள்ளனர்.கோபால்பட்டி அருகே தி.வடுகபட்டியில் நேற்று காலை 30 வயது மதிக்கதக்க 2 பெண்கள் வந்துள்ளனர்.அவர்கள் தங்களை மின்சார வாரிய அலுவலக ஊழியர்கள் என அறிமுகப்படுத்தி கொண்டு வீட்டு மின் இணைப்பு எண்ணை புதிதாக எழுதி ஒட்ட வந்துள்ளதாகவும் அதற்கு ரூ.50 கட்டணம் என கூறி உள்ளனர்.இதனை நம்பிய பலர் ரூ.50 கொடுத்துள்ளனர். ஒரு சிலர் சந்தேகம் எழுப்பவே சம்பந்தப்பட்ட பெண்கள் தப்பினர்.சில மாதங்களுக்கு முன்பு தி.பாரைபட்டியிலும் இதே போன்று மின்சார வாரியத்தின் பெயரை கூறி இதே போன்ற மோசடி நடைபெற்றுள்ளது.கிராமங்களில் அவ்வப்போது நடக்கும் இதுபோன்ற மோசடி பேர்வழிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ