உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைரோடு அருகே தொழிலாளி கொலை

கொடைரோடு அருகே தொழிலாளி கொலை

கொடைரோடு : கொடைரோடு அருகே கூலி தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார் . கொடைரோடு அருகே காந்தி நகரில் வசித்தவர் அழகர்சாமி 52. கூலித் தொழிலாளியான இவர் அவரது மனைவியுடன் டூவீலரில் தோட்டத்திற்கு சென்று திரும்பினார். திண்டுக்கல் மதுரை நான்கு வழி சாலை கன்னிமார் கோயில் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத இரு நபர்கள் டூவீலரை மறித்து அழகர் சாமியை அரிவாளால் வெட்டியதில் பலியானார். எஸ்.பி., பிரதீப் விசாரணை செய்தார். அம்மையநாயக்கனூர் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ