உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாராகி அம்மன் கோயிலில் யாக பூஜை

வாராகி அம்மன் கோயிலில் யாக பூஜை

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் ஆடி பவுர்ணமி பூஜையையொட்டி உலக நன்மை வேண்டி நடந்த யாக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். வாராகி அறக்கட்டளை தலைவரும் பீடாதிபதியுமான சஞ்சீவி சுவாமிகள் நடத்தினார். வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ