உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் மீண்டும் மஞ்சள் பை

கொடை யில் மீண்டும் மஞ்சள் பை

கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சியில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு , வாகனம் வழங்கும் விழா நடந்தது. நகராட்சி தலைவர் செல்லத்துரை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் மாயகண்ணன், கமிஷனர் சத்தியநாதன், உதவி வனப்பாதுகாவலர் சக்திவேல், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் உஷாராணி, அனிதா கலந்து கொண்டனர். மீண்டும் மஞ்சள் பை திட்டத்தில் எலக்ட்ரிக் டூவீலர்களில் வார்டு தோறும் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் நாள்தோறும் தடை பிளாஸ்டிக் , மஞ்சள் பையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை