உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேர்தல் பணியில் 10 ஆயிரம் ஆசிரியர்கள்

தேர்தல் பணியில் 10 ஆயிரம் ஆசிரியர்கள்

திண்டுக்கல் : லோக்சபா தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் வேடசந்துார் தொகுதி கரூர் லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ளது. மாவட்டத்தில் 18.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டுபதிவுக்காக 2121 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தேர்தல் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். குறிப்பாக ஓட்டுபதிவுக்கான பணிகளில் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களின் விவரங்கள் குறித்த பட்டியல் கல்வித் துறை மூலம் மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை