உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற 2 பேர் கைது

வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே முன்விரோதத்தில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்த கொன்ற 2 பேரை போலீசார் 7 மணி நேரத்தில் கைது செய்தனர்.திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் சதீஷ்,35. இவருக்கும் எருமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு சரவணக்குமார் சதீஷிடம் பஸ் ஸ்டாண்டில் வைத்து தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த சதீஷ், சரவணக்குமாரை தாக்கினார். காயமடைந்த சரவணக்குமார், தன் தம்பி பிரேம்குமாரிடம் நடந்ததை தெரிவித்தார். ஆத்திரத்தில் இருந்த இருவரும் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்ற சதீஷை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை சதீஷ் மீது ஊற்றி தீ வைத்தனர். பின் அங்கிருந்து இருவரும் தப்பினர். சதீஷ் மீது தீ முழுவதும் பரவியது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஏ.எஸ்.பி.,சிபின் தலைமையிலான வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்து சி.சி.டி.வி.,காட்சிகளை ஆய்வு செய்தனர். இன்று காலை சிகிச்சையிலிருந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். தப்பி ஓடிய சரவணக்குமார், பிரேம்குமாரை போலீசார் சம்பவம் நடந்த 7 மணி நேரத்தில் விருதுநகரில் வைத்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை