| ADDED : ஜன 04, 2024 02:44 AM
திண்டுக்கல்: வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒரு பணி விதியை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 700 பேர் ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்தனர்.அரசியல் தலையீடுகளை கட்டுப்படுத்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒரு பணி விதியை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த முடிவெடுத்தனர். நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 14 ஒன்றிய அலுவலகங்கள்,கலெக்டர் அலுவலகம்,மாவட்ட ஊராட்சி அலுவலகம்,திட்ட இயக்குநர் அலுவலகம்,மகளிர் திட்ட அலுவலகம்,உதவி இயக்குநர் தணிக்கை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்றும் மாலை 4:45 முதல் 5:45 பணி 1 மணி நேரம் பணி வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாநில செயலாளர் ராஜசேகர்,மாவட்ட செயலாளர் முருகானந்தம்,கிளைத்தலைவர் காண்டீபன் தலைமையில் பணியாளர்கள் வெளிநடப்பு செய்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் 700க்கு மேலான அரசு பணியாளர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று கலெக்டர் அலுவலகத்தில் பெருந்திரள் போராட்டம் நடத்தபோவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.