உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழுதாகி நடுவழியில் நின்ற லொடக்கு பஸ்

பழுதாகி நடுவழியில் நின்ற லொடக்கு பஸ்

நத்தம், : சாணார்பட்டியில் பழுதாகி பயணிகளுடன் நடுவழியில் நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி அடைந்தனர்.நத்தத்திலிருந்து கோபால்பட்டி வழியாக திண்டுக்கல்லுக்கு 25க்கு மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. சாணார்பட்டி ஒன்றிய அலுவலகம் எதிரே சென்றபோது பழுதாகி நடுவழியில் நின்றது. டிரைவர் முயற்சித்தும் பழுதை சரி செய்ய முடியவில்லை. பயணிகள் கடும் அவதி அடைந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து அவ்வழியே வந்த வேறு பஸ்களில் ஏறி சென்றனர். இப்பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்கள் முறையாக பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நிற்பது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். முறையாக அரசு பஸ்களை பராமரிக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை