உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அனந்தபுரி எக்ஸ்பிரசில் திருட்டு: வடமாநிலத்தவர் கைது

அனந்தபுரி எக்ஸ்பிரசில் திருட்டு: வடமாநிலத்தவர் கைது

திண்டுக்கல் : சென்னையிலிருந்து திண்டுக்கல் வழியாக செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரசில் பெண் பயணியிடம் பேக்கை திருடிய வடமாநில கொள்ளையனை திண்டுக்கல் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி55. பிப்.3ல் குடும்பத்துடன் சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்ல அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறினார். இதே ரயிலில் உத்தரபிரதேசம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் குமாரும் ஏறினார். ஆகாஷ்குமாருக்கு ரயில்களில் இரவில் பயணிகள் துாங்கும் நேரத்தில் அவர்களின் உடமைகளை திருடி விட்டு ஏதாவது ஒரு ஸ்டேஷனில் இறங்குவது தொழில். அதிகாலை 3:00 மணிக்கு ரயில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே உள்ள சிக்னலில் நின்றது. அப்போது ஆகாஷ்குமார் ராஜேஸ்வரியின் பேக்கை திருடிக்கொண்டு ரயிலிலிருந்து இறங்கினார். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் எழுந்த ராஜேஸ்வரி தன் பேக்கை காணாமல் தவித்தார். திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கிரைம் போலீசார் வெங்கடேஷன், மணிமாறன்,ஆறுமுகம்,சதிஷ், மருதராஜ் ஆகியோர் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த ஆகாஷ்குமாரை கைது செய்து ராஜேஸ்வரி பறிகொடுத்த ரூ.10 ஆயிரம்,2 ஸ்மார்ட் வாட்ச்,அலைபேசி உள்ளிட்ட பொருட்கள் இருந்த பேக்கை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை