உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெரிய நாயகி அம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்

பெரிய நாயகி அம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்

பழநி : பழநி பெரிய நாயகி அம்மன் கோயிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பெரிய நாயகி அம்மன் கோயிலில் புனித நீர் நிரப்பிய கலசங்களுக்கு வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம், முத்துகுமாரசுவாமி மண்டபத்தில் நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீர், பெரியநாயகி அம்மன் கோயிலில் பிரகாரத்தில் வலம் வந்தது. கைலாசநாதர், பெரியநாயகியம்மன், சோமாஸ்கந்தர் சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்துஅய்யர், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ