| ADDED : நவ 23, 2025 03:39 AM
தாண்டிக்குடி: கொடைக்கானல் மலைப்பகுதியில் தொல்லியல் சுற்றுலா ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தொல்லியியல்துறை கண்கானிப்பாளர் அரவாலி தெரிவித்தார். கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்களை உலக பாரம்பரிய வார விழாவை அடுத்து ஆய்வு செய்து தூய்மைப்படுத்தினர். இந்திய தொல்லியியல் துறை கண்கானிப்பாளர் அரவாலி, உதவி தொல்லியல் கண்கானிப்பாளர் முத்துக்குமார், உதவி தொல்லியியல் ஆய்வாளர்கள் வெற்றி செல்வி, ராஜா பண்ணைக்காடு பேருராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் பங்கேற்றனர். அரவாலி, இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் கூறுகையில்: கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் உள்ள 5 இடங்கள் தொல்லியியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தாண்டிக்குடி பண்ணைக்காடு ரோட்டில் உள்ள கற்திட்டைகள் 3 ஆயிரம் ஆண்டு பழமையானது. இவற்றின் தொன்மையை பழமை மாறாமல் பராமரிக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள ஏதுவாக இவ்விடங்களில் அகழ்வு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். உள்ளூர்வாசிகள் அறிந்து கொள்ள உலக பாரம்பரிய வார விழா கடைபிடிக்கப்படுகிறது. தாண்டிக்குடி, கொடைக்கானல் மலைப்பகுதியில் தொல்லியல் சுற்றுலா ஏற்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.