| ADDED : மார் 24, 2024 05:53 AM
மாவட்டத்தில் கொடைக்கானல், தாண்டிக்குடி, கன்னிவாடி, ஆடலுார், பன்றிமலை, நத்தம், பழநி, வேடசந்துார், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஏராளமான தொல்லியல் சின்னங்கள் உள்ளன. இவற்றை பராமரிக்காமல் விட்டதால் சேதமடைந்து வருகின்றன. தொல்லியல் துறையினர் சம்மந்தப்பட்ட இடங்களில் இவற்றை சேதப்படுத்துவதோ, சிதைப்பதோ உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை பலகை மட்டும் வைத்துவிட்டு சென்றதோடு சரி. இதுவரை அவற்றின் நிலை குறித்து ஆய்வு செய்யாத அவலம் தொடர்கிறது. இவற்றை முறையாக பாரமரிப்பதோடு ,தொல்லியல் சின்னங்களின் தொன்மை, அவற்றை பயன்படுத்திய முன்னோர்களின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை ஆவணங்கள் ஆக்கி விளக்க வேண்டும். இதோடு தொல்லியல் துறையினர் சம்பந்தப்பட்ட இடங்களில் தொடர் ஆய்வு செய்து அவற்றை பாதுகாப்பதும் அவசியமாகிறது.