உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மறியலில் ஈடுபட முயற்சி

மறியலில் ஈடுபட முயற்சி

பழநி, : பழநி நகராட்சி, ஒன்றாவது வார்டு காமராஜர் நகரில் குடிநீர் குழாய்கள் இணைப்பை துண்டித்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். பழநி நகராட்சி, 1வது வார்டு காமராஜர் நகரில் குடிநீர் குழாய்கள் நகராட்சி மூலம் இணைப்பை துண்டித்தனர். நகராட்சி கவுன்சிலர் ராசு தலைமையில் பொதுமக்கள் புது பழைய தாராபுரம் ரோடு, கோவை ரோடு சந்திப்பில் திரண்டனர். அப்போது குடிநீர் இணைப்பை துண்டித்தால் மாற்றி ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ