உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கிடப்பில் அய்யலுார் புறக்காவல் நிலையம்

 கிடப்பில் அய்யலுார் புறக்காவல் நிலையம்

வடமதுரை: அய்யலுாரில் புறக்காவல் நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது.இதற்கு புத்துயிர் அளிக்க தற்போதைய எஸ்.பி.,யின் நடவடிக்கை அவசியமாகிறது . திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலையில் முக்கிய ஊர் அய்யலுார். சுற்றிலும் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. சில பகுதிகள் இங்கிருந்தே 12 கி.மீ., துாரத்தில் உள்ளன. சட்ட விரோத செயல்கள் குறித்து வடமதுரை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிந்து போலீசார் செல்வதற்குள் சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப போலீஸ் நிலைய எல்லை வரையறை மாற்றம் இல்லாமல் தொடர்வதும் இதற்கு ஒரு காரணம். இதுபோன்ற காரணங்களை முன்னிலைப்படுத்தி அய்யலுாரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென திண்டுக்கல் எஸ்.பி.,யாக இருந்த முத்துச்சாமியிடம் வலியுறுத்தப்பட்டது. பரிந்துரை கருத்துரு தயார் செய்து அனுப்ப அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். சில மாதங்களில் முத்துச்சாமி எஸ்.பி., மாறுதலாகவே திட்டம் கிடப்பிற்கு போனது. இங்கு புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்