உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொட்டியை அகற்ற ஏலம்

தொட்டியை அகற்ற ஏலம்

செம்பட்டி: கொடைரோடு அருகே மேட்டூர்-செம்பட்டி இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கிறது.நிலக்கோட்டை ஒன்றியம் ஜம்புதுரைக்கோட்டை சக்காயநாயக்கனூரில் 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை தொட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டது.இந்த கட்டமைப்பில் உள்ள கருங்கற்கள், இரும்பு பொருட்களை ஏலம் விடும் பணி பலத்த போலீஸ்பாதுகாப்புடன் நேற்று நடந்தது. 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செலுத்தி 12 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். ஜெ.மெட்டூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஐயப்பன் 17 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்.ஊராட்சி தலைவர் பவுன்தாய், செயலர் சிவராமன், பச்சைமலையான்கோட்டை ஊராட்சி செயலர் ஜெய்கணேஷ்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை