உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை

திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை

சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் -சாணார்பட்டி அருகே திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகள் பிரியா 20. திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லுாரியில் படித்தார். தேனி மாவட்டம் கூடலுார் சவடம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவசாமி மகன் கமலக்கண்ணனுடன் பிப்.11ல் இவருக்கு திருமணம் நடந்தது. கமலக்கண்ணன் கம்பத்தில் ஓர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.மறுவீடு அழைப்புக்காக நேற்று புதுமணத்தம்பதியை பெற்றோர் அஞ்சுகுழிப்பட்டிக்கு அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் கணவன்- மனைவி இருவரும் தனித்தனியாக துாங்கச் சென்றுள்ளனர். நேற்று காலையில் பிரியா அவரது அறையில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்.ஐ., ராஜேந்திரன் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி