உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கார் மோதி விபத்து; பெண் தொழிலாளி பலி

 கார் மோதி விபத்து; பெண் தொழிலாளி பலி

வேடசந்தூர்: வேடசந்துார் அருகே கார் டூவிலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், நுாற்பாலை ெதாழிலாளி ஒருவர் உயிரிழந்தார். அழகுபட்டி தெப்பக்குளத்துப்பட்டியை சேர்ந்த நுாற்பாலை தொழிலாளி பழனியம்மாள் 48. இவர், வேடசந்தூர் - திண்டுக்கல் ரோட்டில் தனது உறவினர் தங்கவேல் என்பவரின் டூவீலரில் சென்றார். அமைதி தனியார் கல்லூரி அருகே கட் ரோட்டில், வலது புறம் திரும்பிய போது, திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி நாமக்கல் பஜார் தெருவை சேர்ந்த விபின் ஓட்டி வந்த கார் மோதியது. மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பழனியம்மாள் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை