| ADDED : நவ 28, 2025 07:58 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம், புனித ஜான்பால் அகாடமி, பிரவின் செல்வகுமார் நினைவு கேரம் அகாடமி இணைந்து, சந்தியாகு, சிறுமணியம்மாள் நினைவு மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடத்துகின்றன. திண்டுக்கல் புனித ஜான்பால் அகாடமியில் நவ.29, நவ.30ல் போட்டியில் 12, 14, 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக ஒற்றையர், இரட்டையர் பிரிவிலும், சீனியர் ஆண்களுக்கு ஒற்றையர் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டிகள் காலை 9:30 மணிக்கு தொடங்கும். முதல் 4 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகள் உண்டு. போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டைகர், மதிய உணவு, விளையாட்டு சீருடையுடன் வரவேண்டும். நவ.29ல் மாணவர்களுக்கும். நவ.30 சீனியர் ஆண்கள், மாணவிகளுக்கும் போட்டி நடக்கும். நவ.28 (இன்று) இரவு 8:00 மணிக்குள் அணிகளை பதிவு வேண்டும். விவரங்களுக்கு 97860 61985 எண்ணில் அணுகலாம்.