உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் குழந்தை கடத்தல்: வாலிபருக்கு தர்ம அடி

திண்டுக்கல்லில் குழந்தை கடத்தல்: வாலிபருக்கு தர்ம அடி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 3 வயது ஆண் குழந்தையை திருட முயன்ற வேலுார் வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பிரமணி,35. இவருக்கு 3 வயதில் ஆண் குழுந்தை உள்ளது. இந்நிலையில் சுப்பிரமணியின் குழந்தை தன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அந்தவழியில் நடந்து வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், குழந்தையை துாக்கி கடத்த முயன்றார். சுதாரித்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து குழந்தையை வாங்கி தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்கள் அந்த வாலிபரை போலீசில் ஒப்படைத்தனர். காயம் இருந்ததால் போலீசார் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரணையை துவக்கினர். முதல்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் வேலுார் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வந்த்,40, என்பதும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றுவதும் போலீசாருக்கு தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை