உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் துவக்கம்

காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் துவக்கம்

ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் நாளை (பிப். 2) கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று முதற்கால வேள்வி தொடங்கியது.பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் நாளை (பிப். 2) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று மாலை முதற்கால வேள்வி தொடங்கியது.நேற்று காலை நன்மங்கள இன்னிசை, அனுமதி பெறுதல், பிள்ளையார் வழிபாடு, நல்லெண்ணம் விழைதல், புனிதச் சொல் மொழிதல், பிள்ளையார் வேள்வி, தலம் புனிதமாக்கல் நடந்தது. மாலை புனித மண் எடுத்தல், திருமுளைப்பாலிகை இடுதல், காப்பு கட்டுதல் திருக்குடங்கள் நிறுவுதல் நடந்தது. அருள் சக்தியை திருக்குடங்களில் எழுந்தருளச் செய்தல், வேள்விச்சாலை புகுதல், வேள்வி தொடக்கம், கனி, கிழங்கு, மூலிகைகள் உள்ளிட்ட பல்பொருள் வேள்வி நடந்தது. இரவு பேரொளி வழிபாடு, திருமறை, திருமுறை விண்ணப்பம், திருநீறு, திருவமுது வழங்குதல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை